×

கே புதுப்பட்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா

திருமயம், நவ.30: திருமயம் அருகே கே.புதுப்பட்டியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் கே புதுப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு சிவா தலைமை தாங்கினார். வீரப்பன் முன்னிலை வைத்தார். விழாவில் 24 மணி நேரமும் செயல் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை கோட்டையூர் பொன். பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து 60 மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூபாய் 2 லட்சம் வழங்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவையை பெற கைபேசி எண்7094779477 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Tags :