×

49 சிறப்பு முகாம்களில் தங்கியிருந்த 1,831 பேருக்கு நிவாரண பொருட்கள்

பெரம்பலூர், நவ. 27: பெரம்பலூர் மாவட்டத்தில் நிகர் புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 49 முகாம்களில் தங்கியிருந்த 1,831 பேருக்கு நிவாரண பொருட்களை எம்எல்ஏக்கள் வழங்கினர். நிவர் புயலால் பொதுமக்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் 25ம் தேதி இரவு வரை பெரம்பலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் 17 இடங்கள், ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் 8 இடங்கள், குன்னம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் 5 இடங்கள், வேப்பந்தட்டை தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் 19 இடங்கள் என மொத்தம் பெரம்பலூர் மாவட்ட அளவில் 49 இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் 552 ஆண்கள், 836 பெண்கள், 443 குழந்தைகள் என மொத்தம் 1,831பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று கண்டறிதல் பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளனர். இவர்களுக்கு பெரம்பலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏக்கள் தமிழ்ச்செல்வன், ராமச்சந்திரன் ஆகியோர் நிவாரண பொருட்களை வழங்கினர்.

Tags : camps ,
× RELATED கடும் வறட்சி எதிரொலி: டாப்சிலிப்...