×

திமுக மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு,  நவ.27: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர்  அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ,  மேற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பூங்கோதை செல்லதுரை ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில்,  மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி, நாமக்கல் மாவட்டத்திற்கு வர இருப்பது குறித்தும், கிராமப்புற மகளிரை சந்தித்து  திண்ணை பிரசாரம் செய்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட துணை  அமைப்பாளர் விசாலாட்சி நன்றி கூறினார். இதில் நகர பொறுப்பாளர்  கார்த்திகேயன், இளைஞர் அணி அமைப்பாளர் மதுராசெந்தில்,  துணை அமைப்பாளர்கள்  சுகந்தி, மைதிலி தங்கமணி, மகேஸ்வரி, சந்திரா, ஜெயமணி, சரோஜா, ஜெகதீஸ்வரி,  மலர் ரஞ்திதம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK Women's Team Consultative Meeting ,
× RELATED நாமக்கல் ஒன்றியத்தில் ஆட்டு கொட்டாய் கட்டும் திட்டத்தில் முறைகேடு