×

தொழிலாளியிடம் செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது

திருப்பூர், நவ 23:  மதுரை மாவட்டம், பேரூரை சேர்ந்தவர் கருப்பையன்(41). இவர் திருப்பூர் முருகம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி டெய்லராக வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு பணியை முடித்து கொண்டு முருகம்பாளையத்தை அடுத்த சுண்டமேடு பகுதியில் தனது நண்பருடன் போனில் பேசிக்கொண்டு வந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் கருப்பையனிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து கருப்பையன் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் பழவஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார்(20), மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (22), திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா(19) ஆகியோர் தான் கருப்பையனிடம் செல்போன் பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags : youths ,
× RELATED செந்துறையில் அதிக வேகத்தில் சென்ற கனரக வாகனங்களை மறித்த இளைஞர்கள்