×

கைதானவர்களை விடுவிக்கக்கோரி விசி கட்சியினர் சாலை மறியல்; 58 பேர் கைது

தர்மபுரி, அக்.28:தர்மபுரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், தலைவர் திருமாவளவன் மீது பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், திருமாவளவனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் கலந்து கொண்டு பேசினார். மின்னல் சக்தி, குண்டுசக்தி, மன்னன், கப்பல் செந்தில்குமார், சாக்கன்சர்மா, ஜெகநாதன், வடிவேல், அம்பேத்வளவன், கிள்ளிவளவன், மாநில நிர்வாகி ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கைது செய்யப்பட்ட பாண்டியன் உள்ளிட்ட 13 பேரை விடுதலை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன், தர்மபுரி- சேலம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 58 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : parties ,road ,release ,detainees ,
× RELATED பாஜக வேல் யாத்திரைக்கு தடைவிதிக்க வேண்டும் விசி கட்சியினர் கோரிக்கை