×

பாலக்கோட்டில் திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை

பாலக்கோடு, அக்.27: பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை மு காம் நடந்தது. பாலக்கோடு பேரூர் செயலாளர் முரளி தலைமையில் நடைபெற்ற முகாமில், 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக உறுப்பினர்களாக சேர்ந்தனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ, அடையாள அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் குட்டி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடாஜலம், முருகன், ரவி, மணி, நாகராஜ், கந்தசாமி, அழகுசிங்கம், முத்து சாமி, ராஜாமணி, ஆனந்தன், மோகன், கார்த்திகேயன், ஆப்பிள்பாபு, விஜயன், நௌஷாத், சிங்காரவேல், துரைசுரேஷ், முனியப்பன், நவீன், செல்வராஜ், இதயத்துல்லா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காரிமங்கலம் : மேற்கு ஒன்றியத்தில் நடைபெற்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாம், மல்லுப்பட்டியில் வழக்கறிஞர் கோபால் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு, மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் வஜ்ஜிரவேல், ராஜா, முனுசாமி, மெய்யப்பன், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Balakot ,
× RELATED பாலக்கோடு அருகே மீட்கப்பட்ட கிணறு...