×

ரேஷன் பொருட்கள் வாங்காமல் புறக்கணித்த கிராம மக்கள் செய்யாறு அருகே பரபரப்பு

செய்யாறு, அக்.23: செய்யாறு அருகே மலையை கல் குவாரிக்கு டெண்டர் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேஷன் பொருட்கள் வாங்காமல் கிராம மக்கள் புறக்கணித்தனர். செய்யாறு அடுத்த அத்தி கிராமத்தில் சுமார் 1800 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 16 ஏக்கர் நிலபரப்பில் 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு மலையும், அதன்மீது முருகன் கோயிலும் உள்ளது. மலையில் நூற்றுக்கணக்கான குரங்கு, மயில், முயல், மான் போன்ற உயிரினங்கள் வசிக்கின்றன.

இந்நிலையில் இந்த மலையில் சுமார் 450 ஹெக்டரில் உள்ள மலை கடந்த ஆண்டு கல் குவாரிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால், கிராமத்திற்கு பாதுகாப்பு அரணாக விளங்கும் அத்திமலையை, மக்களின் கருத்தை கேட்காமல் கல் குவாரிக்கு டெண்டர் விட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். டெண்டரை ரத்து செய்யக்கோரி கடந்த ஜூலை 28ம் தேதி செய்யாறு ஆர்டிஓவிடம் மனு அளித்தனர். கடந்த 9ம் தேதி பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மலையை டெண்டர் விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கிராம மக்கள் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணித்தனர். சுமார் 380 ரேஷன் கார்டுகள் உள்ள இந்த கிராமத்தில் 307 ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED வேன் தலைகீழாக கவிழ்ந்து 10 பேர் காயம் சேத்துப்பட்டு மாதாமலையில்