×

திருப்பூரில் புதிதாக 120 பேருக்கு கொரோனா

திருப்பூர், அக்.22:  திருப்பூரில் புதிதாக 120 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும்,  பாதிப்பு குறையவில்லை. நேற்று புதிதாக 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இவர்கள் அனைவருக்கும் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,558 ஆக உயர்ந்துள்ளது. 1,108 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 101 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 5,427 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், 257 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். மேலும், 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருந்த 347 பேர் விடுவிக்கப்பட்டனர். சந்தேகத்தின் பேரில் 2,584 பேருக்கு சளி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

Tags : Corona ,Tirupur ,
× RELATED திருப்பூரில் மேலும் 67 பேருக்கு கொரோனா