×

கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனம்

திருப்பூர், அக்.22: கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநகர காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மண்டல தொடர்பு அலுவலகம் சார்பில் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது.போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கமிஷனர் கார்த்திகேயன் பிரசார வாகன பயணத்தை துவக்கி வைத்தார். துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல், மத்திய அமைச்சக மண்டல தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் கரீனா பி.தன்கமம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Corona Awareness Campaign ,
× RELATED பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?