×

மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதி மீறிய 514 பேர் மீது வழக்கு ₹1.20 லட்சம் அபராதம் வசூல்

தர்மபுரி, அக்.1:தர்மபுரி மாவட்டத்தில்,ஊரடங்கு விதி மீறியதாக 514 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஊரடங்கு விதிகளை மீறுவோரிடமிருந்து அபராதம் வசூலிக்க ஆணையிட்டுள்ளது. தர்மபுரி எஸ்பி பிரவேஸ்குமார் உத்தரவின்பேரில், நேற்று முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் ஊரடங்கு விதிகளை மீறியதாக, தர்மபுரி மாவட்டத்தில் 297 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ₹59,400 வசூலிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 217 பேர் மீது வழக்கு பதிவு செய்து ₹43,400 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் கூறுகையில், ‘அபராதம் விதிக்கப்படுவதை தவிர்க்க, வெளியிடங்களுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அரசின் அனைத்து வழிகாட்டு முறைகளையும் கடைபிடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...