×

மாணவி கடத்தல்

வேப்பனஹள்ளி, செப்.30: வேப்பனஹள்ளி அருகே சிகரமாகனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் மகள் ரஞ்சிதா(21). போலுப்பள்ளி தனியார் கலைக்கல்லூரியில் பிசிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன், கல்லூரிக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சந்தோஷ் வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதில், வேப்பனஹள்ளி பிடிஓ ஆபீஸ் எதிரே வசிக்கும் பெயிண்டர் சஞ்சித்குமார்(24), தனது மகளை கடத்திச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பிளஸ்2 மாணவி கடத்தல்