×

பென்னாகரத்தில் திமுக, கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பென்னாகரம், செப்.29: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக் கோரி, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில், பென்னாகரம் மற்றும் ஏரியூர் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.அம்பேத்கர் சிலை முன்பு திமுக மற்றும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இ.கம்யூனிஸ்ட், விசி, தவாக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தர்மசெல்வன் கலந்து கொண்டு பேசினார். இதேபோல் பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இன்பசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் வீரமணி, ஒன்றிய பொருளாளர் மடம் முருகேசன், சேலம் ஹோட்டல் வினு, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சிவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஏரியூரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் காதர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Coalition parties ,Pennagaram ,
× RELATED வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி...