×

தர்மபுரி மாவட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்த்தப்படவில்லை

தர்மபுரி, மார்ச் 20: தர்மபுரி உட்பட ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக, ரயில்வே ஜங்ஷன்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க, பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை ₹10 ரூபாயில் இருந்து ₹50 ரூபாயாக  ரயில்வே நிர்வாகம் உயர்த்தியதாக  தகவல் பரவியது. இந்த உத்தரவு, ரயில்வே ஸ்டேஷன்களுக்கும் பொருந்துமா என? பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே ஜங்ஷன்களில் பயணிகள் கூட்டத்தோடு, அவர்களை வழியனுப்ப வருவோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த அங்கு பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணம் ₹10 ரூபாயிலிருந்து ₹50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் உள்ள பல ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகள் வருகை குறிப்பிட்ட அளவு மட்டும் உள்ள நிலையில், அவர்களை வழியனுப்ப வருவோரின் எண்ணிக்கையும், மிக குறைந்தளவில் மட்டுமே உள்ளது. இதனால், அங்கு கொரோனா பாதிப்பு குறைவாகவே இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து, இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் வழக்கம் போல், ₹10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே போல், நாடு முழுவதுமுள்ள ரயில்வே ஸ்டேஷன்களுக்கு, பிளாட்பார்ம் டிக்கெட் கட்டண உயர்வு குறித்த எந்த சுற்றிக்கையும் வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறின

Tags : district railway stations ,Dharmapuri ,
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி