×

பெரம்பலூரில் தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு

பெரம்பலூர், மார்ச் 19: பெரம்பலூரில் வீட்டில் சமைக்கு ம்போது கேஸ்லீக்காகி உட லில்தீப்பற்றி படுகாயமடை ந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். பெரம்பலூர் மேரிபுரத்தைச் சேர்ந்த கோபு (53) என்பவரது மனைவி பூமாதேவி(45). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 24ம்தேதி காலை 9 மணியளவில், வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, திடீரென கேஸ்லீக் ஆகி தீப்பிழம்பு ஏற்பட்டது. அப்போது அவரது சேலையில் தீப்பற்றி தீக்காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் பூ மாதேவியை பெரம்பலூர் மாவட்ட அரசுத் தலைமைப் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில் அங்கும் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து விட் டார். இதனிடையே பூமாதே வியின் கணவர் கோபு தனது மனைவியின் சாவில் தனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்து விட்டார். இது குறித்து பெர ம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

தனியார் ஆம்புலன்சில் செல்ல வேண்டாம்
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனை த்து 108ஆம்புலன்ஸ் ஊழி யர்களும் வைரஸ்அறிகுறி உள்ள நோயாளிகளை பா துகாப்பு உடை உபகரணங் களின்றி அழைத்துச் செல்ல வேண்டாமென்றும், கொரோனா வைரஸ் நோய் தொ ற்று அறிகுறி இருப்பின் மாவட்ட மேலாளர் அல்லது மாவட்ட ஒருங்கிணை ப்பாளரை தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மண்டல மேலாளர் ஜெயக்குமார், பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags : Perambalur ,
× RELATED தெலுங்கானாவில் காதல் திருமணம் செய்த...