×

பொதுமக்களுக்கு வேண்டுகோள் புள்ளி விவர கணக்கெடுப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்

அரியலூர், மார்ச் 19: தேசிய புள்ளி விவரக்கணக்கெடுப்பிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுநலக் கொள்கைகளை உருவாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் அரசாங்கம் புள்ளி விவரங்களை சேகரித்துப் பயன்படுத்துகிறது. தேசிய புள்ளி விவர அலுவலகமானது (nso) பொதுநல விவரங்களை கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கிறது. தற்போதைய கணக்கெடுப்பில் ழிஷிளி உள்நாட்டு சுற்றுலா செலவினம், பல்நோக்கு குறியீடு ஆய்வு (வீடு கட்டப்பட்ட விவரம், நுகர்வு செலவு, வருவாய், வேலை வாய்ப்பு, கல்வி, சுகாதாரம் முதலியன) புள்ளி விவரங்களை கணக்கெடுப்பு செய்கிறது.

தேசிய புள்ளி விவரக்கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, திட்டமிடல், கொள்கை வகுத்தல் மற்றும் ஆராய்ச்சி போன்ற நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். தேசிய புள்ளி விவரக்கணக்கெடுப்பு அலுவலர்கள் தகவல் சேகரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளுக்கு வருகைபுரிய உள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டையும் nso ஆல் வழங்கப்பட்டுள்ளது. அவ்வலுவலர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி சரியான முழுமையான தகவல்கள் அளித்து நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்ய வேண்டுமென மாவட்ட கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : public ,
× RELATED போக்குவரத்துக்கு லாயக்கற்ற ஓரிக்கை...