×

பிளஸ் 1 பொதுத்தேர்வு 130 பேர் ஆப்சென்ட்

ஊட்டி, மார்ச் 19:  நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. நேற்று இயற்பியல், பொருளியல், கணினி நுட்பவியல் உள்ளிட்ட பாடத்தேர்வுகள் நடத்தது. இயற்பியல் பாடத்தேர்வில் 3310 மாணவ, மாணவியர்களில் 3258 பேர் தேர்வு எழுதினர். 52 பேர் தேர்வு எழுதவில்லை. பொருளியல் பாடத்தேர்வில் 3193 பேரில் 3135 பேர் தேர்வு எழுதினர். 58 பேர் எழுதவில்லை. கணினி நுட்பவியல் பாடத்தில் 300 பேர் தேர்வு எழுதினர். 20 பேர் எழுதவில்லை.
தனித்தேர்வர்களில் இயற்பியல் பாடத்தில் 67 பேர் தேர்வு எழுதினர். ஒருவர் எழுதவில்லை. பொருளியல் பாடத்தில் 32 பேர் எழுதினர். 3 பேர் எழுதவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுைகயை 49 மாணவர்கள் பெற்றனர். இதில் அரசு தேர்வு துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணி நேரம், சொல்வதை எழுதுபவர்கள், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுத தகுதியடைய 6,823 பேர்களில் 6,693 ேபர் தேர்வு எழுதினார்கள். 130 பேர் தேர்வு எழுதவில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags : election ,
× RELATED வரத்து குறைவால் விலை மேலும்...