×

பெண்ணுக்கு கொலை மிரட்டல்- முதியவர் கைது

ஊத்தங்கரை, மார்ச் 19:ஊத்தங்கரை அடுத்த கருமாண்டபதி பகுதியை சேர்ந்த விவசாயி முருகன்(50). இவரது மனைவி விஜயா(45). இவர் கடந்த 13ம் தேதி காலை 6 மணியளவில், வீட்டு வாசலில் சாணம் தெளித்து கொண்டிருந்தார். அப்போது, அந்த சாணமானது,  எதிர்வீட்டு சுவற்றில் பட்டுள்ளது. இதை பார்த்த வீட்டு உரிமையாளரான ராமநாதன்(60), விஜயாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ராமநாதன், விஜயாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விஜயா ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு ராமநாதனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED பெண்ணிடம் வழிப்பறி