×

சைல்டு லைன் 1098 சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம்

கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி அடுத்த வேப்பனஹள்ளி ஒன்றியம் வி.மாதேப்பள்ளி கிராமத்தில் சைல்டு லைன் 10989 சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவர் அறிவொளி தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் லட்சுமிகாந்தம், பஞ்சாயத்து கவுன்சிலர் ராதா மாதப்பன், சமூக நலத்துறை மண்டல சேவகி விஜயலட்சுமி, சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, அணி உறுப்பினர்கள் ரமேஷ், அஜந்தா ஆகியோர் பங்கேற்று பேசினர். இதில், நீதிபதி அறிவொளி, இலவச சட்ட உதவிகள், சட்ட விழிப்புணர்வு, குழந்தை திருமணங்களை தடுப்பது, பெண்களின் உரிமைகள், பெண் கல்வியின் அவசியம் குறித்து விளக்கமளித்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளிடம் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில், அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள், குடிநீர் பிரச்னை, முதியோர் உதவித்தொகை பெறுவது, குழந்தை திருமணங்களை தடுப்பது குறித்து நீதிபதியிடம் மனு அளித்தனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் உறுப்பினர் விஜயலட்சுமி செய்திருந்தார். இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Legal Awareness Camp ,
× RELATED செட்டியாபத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்