×

மதுரை மாவட்டத்தில் திமுக கிளை கழக தேர்தலில் போட்டியிட இளைஞர்கள் ஆர்வம்

மதுரை, பிப். 28: மதுரை மாவட்டத்தில் திமுக உள்கட்சி கிளை தேர்தலில் விருப்ப மனு வாங்குவது தொடங்கியது. இதில் இளைஞர்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் மனு அளித்தனர்.
திமுக உள்கட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. மதுரை வடக்கு மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக கிளை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் மனு வாங்குவது நேற்று தொடங்கியது. மதுரை கிழக்கு ஒன்றியம் கருப்பாயூரணியில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தலைமை கழக பிரதிநிதி சைதை மகேஷ்குமார், மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து அனைத்து கிளைகளுக்கும் மனுக்கள் பெறப்பட்டன. இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தனர். இதில் மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.பி.ரகுபதி, மாவட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், சேகர். நேரு. இளைஞரணி ஜி.பி.ராஜா, பாலாண்டி, அண்ணாமலை, மதிவாணன், கருப்பாயூரணி சுரேஷ், வடிவேல் முருகன்., அய்யப்பன், வினோத், கலாநிதி உள்ளிட்ட பல்ர் பங்கேற்றனர். இன்று மதுரை மேற்கு ஒன்றியத்தில் மனு வாங்கப்படுகிறது.

மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் உள்கட்சி தேர்தல் பணிகள் துவங்கியுள்ளன. நேற்று திருமங்கலம் ஒன்றியத்தில் கட்சியினரிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதன் துவக்க நிகழ்ச்சியாக திருமங்கலத்தை அடுத்த செக்காணுரணியில் நடந்தது. தலைமை கழக பிரதிநிதி சைதை மகேஷ்குமார், தோ்தல் பணிக்குழு செயலாளர் சேடபட்டி முத்தையா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், மூா்த்தி எம்எல்ஏ ஆகியோர் கட்சியினரிடம் மனுக்களை பெற்றனர். நிர்வாகிகள் மிகவும் ஆர்வத்துடன் மனுக்களை கொடுத்தனர்.இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டி, மாவட்ட துணை செயலாளர் பாலாஜி, பொருளாளர் பொடா நாகராஜ், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருமங்கலம் ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இவர்கள் கட்சியினரிடம் மனுக்களை பெற்றனர்.


Tags : DMK ,branch election ,Madurai district ,
× RELATED கீழக்கரை அருகே திமுக கிளை கழக தேர்தல்