×

தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் மாநாட்டில் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம், பிப். 28: தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென மீன்சுருட்டியில் நடந்த மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியில் தமிழ்நாடு தையல் கலைஞர்கள் தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் 20வது மாநில மாநாடு நடந்தது.மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநாட்டை மாநில துணை பொது செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட செயலாளர் பாண்டியன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் தேவராஜ், மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.மாநாட்டில் தையற்கலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதுபோல் தையற்கலை தொழிலாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.60 வயது நிறைவடைந்த தொழிலாளர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்குவதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஊராட்சி தலைவர் ஜெயந்தி தெய்வமணி, கிளை சங்க தலைவர் ராஜா பெரியசாமி, மாநில அமைப்பு செயலாளர் குமார், சேகர், துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : conference ,sewing workers ,
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு: குழு அமைத்து ஆணை