×

ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திண்டுக்கல், பிப். 25: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. திண்டுக்கல்லில் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் அதிமுகவினர் அமைதி பேரணி சென்றனர். வத்தலக்குண்டு பஸ்நிலையம் முன்பு நடந்த விழாவிற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை வகிக்க. நகர செயலாளர் பீர்முகமது முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மோகன், நிர்வாகிகள் நாகூர்கனி, துரைராஜ், ஜான், சுதாகர், சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் நடராஜன், ஜோதி விஜயரங்கன், கூட்டுறவு தலைவர்கள் ராமமூர்த்தி, சுந்தர், நல்லமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jayalalithaa Birthday Celebration ,
× RELATED ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 1000 பெண்களுக்கு சேலை