×

நிலத்தை அளந்து தராததால் பட்டா வழங்கிய இடத்தில் 15 பேர் குடிசை அமைத்தனர்

தர்மபுரி, பிப்.21:  தர்மபுரி மாவட்டம் சோகத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டுக்காரம்பட்டியில், தனியார் நலத்தை ஆதிதிராவிடர் நலத்துறைகையகப்படுத்தி, ஆதிதிராவிடர் இன மக்கள் 115 பேருக்கு கடந்த 1998ம் ஆண்டு இலவச பட்டா வழங்கியது. ஆனால், இதுவரை அந்தநிலத்தை அதிகாரிகள் அளவீடு செய்து தரவில்லை.  இதையடுத்து, நேற்று முன்தினம் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவழங்கிய இடத்தில், பயனாளிகள் ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் முருகன், தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில்குடியேறும் போராட்டம் நடத்தினர்.   இதுகுறித்த தகவலின்பேரில், தாசில்தார் சுகுமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சமரசபேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் சென்று குடிசைஅமைத்து குடியேறினர். இதையடுத்து, நேற்று காலை மேலும் சில குடும்பத்தினர் அப்பகுதியில் குடிசை அமைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, தாசில்தார் சுகுமார் மற்றும் போலீசார்  அப்பகுதிக்குவிரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனால், குடிசையை காலி செய்யப்போவதில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Tags : land ,place ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!