×

உக்கிரன்கோட்டை பள்ளியில் 131 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

மானூர், பிப். 21: உக்கிரன்கோட்டை பரிசுத்த பேதுரு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. ஆசிரியர் ஜெனிட்டா மேக்தலின் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். தலைமை ஆசிரியர் எட்வின் மைக்கேல் தாஸ் வரவேற்றார். தாளாளர் பீட்டர் ஜான் வாழ்த்தி பேசினார். விஜிலா சத்யானந்த் எம்பி தலைமை வகித்து 68 மாணவிகள், 63 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு  செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர்  பரணி சங்கரலிங்கம், மானூர் ஒன்றிய செயலாளர் கங்கைமுருகன்,  அரசு உதவிபெறும் பள்ளிகளின் சிக்கன நாணய சங்க தலைவர் சத்யானந்த், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் எபனேசர்  மற்றும்  அதிமுக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியர் விஜிலா கெப்சிபாய் நன்றி கூறினார்.

Tags : school ,Ukrankotte ,
× RELATED புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை...