×

ரயில்வே பள்ளி ஆண்டு விழா

மதுரை, பிப். 19: மதுரை ரயில்வே காலனியில் உள்ள, தெற்கு ரயில்வே மகளிர் நல சங்க உயர்நிலைப் பள்ளியின் 59 வது ஆண்டு விழா, பள்ளி மைதானத்தில் நடந்தது. மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் தலைமை தாங்கி மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாடு குறித்து பேசினார்.

தெற்கு ரயில்வே மகளிர் நலச்சங்க மதுரை கோட்ட தலைவி அனிதா லெனின், துணைத் தலைவர்கள் மஞ்சுளா மன்சுகாணி, பிரதீபா ஷாவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஷா நவாஸ் பானு ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து பள்ளி இறுதி தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களைப் பிடித்த, மாணவ மாணவிகளுக்கு கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர்கள் லலித்குமார் மன்சூகாணி, ஓ.பி.ஷாவ் ஆகியோர், சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். முன்னதாக மகளிர் நலச்சங்க பொருளாளர் கௌரி கிரிதர் லால் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags : Railway School Anniversary ,
× RELATED மதுரையில் தொடர் சோதனை ஸ்மோக் பிஸ்கெட்...