×

பூட்டிய வீட்டில் நகை, பணம் கொள்ளை

பெரியகுளம், பிப். 18: பெரியகுளம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரியகுளம் அருகே உள்ள அகமலை கிராமம் சொக்கன் அலைப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (35). இவர், தனது வீட்டைப்பூட்டி விட்டு, மனைவியுடன் தோட்டத்திற்கு வேலைக்கு போனார். மாலையில் வீட்டுக்கு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே தகரப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி