×

காரிமங்கலம் அருகே சாலை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காரிமங்கலம், பிப்.18: காரிமங்கலம் அருகே சாலை பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி மெயின் ரோட்டிலிருந்து பூனாத்தனஅள்ளி, ராமியம்பட்டி வழியாக சுமார் 9 கிலோமீட்டர் தொலைவிலான தார்சாலை சேதம் அடைந்துள்ளது. எனவே, புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், அமைச்சர் அன்பழகனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து  நபார்டு மற்றும் கிராம சாலை திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெரியாம்பட்டி மெயின்ரோட்டில் இருந்து தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரை, சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டவுடன், 300 மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் சிமெண்ட் கற்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Tags : Karimangalam ,
× RELATED திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்