×

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சாத்தனூர் அணை மதகுகளின் உறுதித்தன்மையை அதிகாரிகள் ஆய்வு 63 ஆண்டுகள் ஆன நிலையில் மாற்றியமைக்க வாய்ப்பு

தண்டராம்பட்டு, பிப்.18: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணை மதகுகளின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1954ம் ஆண்டு, 9 கண் மதகுகள், 119 அடி உயரத்துடன் கட்டப்பட்டு, அணையை 1957ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜர் திறந்து வைத்தார்.அதன் பின்னர், சுற்றுலாத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, மின்சாரத்துறைகளில் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், சாத்தனூர் அணையில் பொழுதுபோக்கு அம்சங்கள், கலை சிற்பங்கள், கலை வண்ணத்துடன் கூடிய ஓவியங்கள், உழைப்பு, வீரம் ஆகியவற்றை உணர்த்தும் சிலைகள், நீச்சல் குளம், கலர் மீன் கண்காட்சி, முதலை பண்ணை ஆகியவை அமைக்கப்பட்டது.விடுமுறை நாட்கள் மற்றும் விழா காலங்களில் சாத்தனூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் வந்து உற்சாகமாக பொழுதுபோக்கி செல்கின்றனர்.

பொதுப்பணித்துறை மூலம் சாத்தனூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 63 ஆண்டுகள் ஆகிறது. ஆண்டுதோறும் அணையில் உள்ள மதகு கதவுகளை வர்ணம் தீட்டி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், சாத்தனூர் அணை தண்ணீரை நம்பி பாசனம் செய்யும் விவசாயிகள், அணை மதகுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, தூர்ந்து போயுள்ளவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், கடந்த 2 நாட்களாக தென்பெண்ணையாறு கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் மகேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் அறிவழகன், செல்வராஜ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாத்தனூர் அணையில் உள்ள மதகு கதவுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சாத்தனூர் அணை கட்டி 63 ஆண்டுகள் ஆகிறது. எனவே, தண்ணீர் திறந்து விடப்படும் மதகு கதவுகளின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, கலெக்டரிடம் அறிக்கையை வழங்க உள்ளோம். அதன்பின்னர் தமிழக அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைத்து, உலக வங்கி நிதியுடன் சாத்தனூர் அணையில் உள்ள மதகு கதவுகள் புதியதாக பொருத்தப்படும்'''' என்றனர்.

Tags : inspection ,Sathanur Dam ,
× RELATED பொதட்டூர்பேட்டையில் ஆய்வு அரசு...