×

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து மடல் துணை பொதுச் செயலாளர் பெரியசாமி வழங்கினார்

திண்டுக்கல், பிப். 17: நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்து மடல்களை திமுக துணை பொதுச் செயலாளர் இ.பெரியசாமி அனைவருக்கும் வழங்கினார். அவர் பேசுகையில், ‘கடந்த நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதேபோல் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வை அமோக வெற்றி பெற செய்து தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சராக அமர்த்த வேண்டும்.

அதற்கு அயராது கழகத் தொண்டர்கள் அனைவரும் பாடுபடவேண்டும் என்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ, மாவட்ட துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன், நகர செயலாளர் ராஜப்பா ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Mukal Stalin ,election ,DMK ,
× RELATED தேர்தலின் போது பயன்படுத்தப்படும்...