×

அவிநாசியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுவிழா

அவிநாசி,பிப்.17:அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 31 ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டுவிழா நேற்று அவிநாசியில் நடைபெற்றது.
தமிழர் பண்பாடு கலாச்சார பேரவை அறக்கட்டளைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். உலக திருக்குறள் பேரவைத்தலைவர் சுந்தரராசஅடிகளார் முன்னிலை வகித்தார். அறிவுச்சுடர் அறக்கட்டளை நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் வார்டுஉறுப்பினர்கள் ஏராளமானவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் ஓடந்துறை ஊராட்சியின் முன்னாள் தலைவர் சண்முகம் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கிராமங்கள் 50 வருடங்கள் முன்னோக்கி வேகமாக வளர்ந்துள்ளது. வறுமைக் கோட்டிற்குள் இல்லாத  குடி மக்களை உருவாக்க பாடுபட வேண்டும். பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு சோதனைகள் சிறிய அளவில் வந்தாலும், உங்களது ஆர்வம் குறையாத சேவை மற்றும் உழைப்பு ஆகியன சிறப்பாக இருந்தால், பொதுமக்கள் மீண்டும் உங்களையே பஞ்சாயத்து தலைவர்களாக நியமிப்பார்கள்.
கட்சி வேறுபாடு இல்லாமல், பாகுபாடு இல்லாமல், கிராம மக்கள் அனைவருக்காகவும் உங்களது சிறப்பான சேவை அமையவேண்டும். தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளுடன், அரசு அதிகாரிகள் இணைந்து செயல்பட்டால், கிராம வளர்ச்சித்திட்டங்கள் சிறப்பாக இருக்கும்.
வாரந்தோறும் திங்கள்கிழமையன்று மக்கள் குறைதீர்நாள்முகாமில்,  மாவட்ட கலெக்டரின் கூட்டத்திற்கு வருகின்ற  திட்ட அலுவலர், உதவித்திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை சந்தித்து உங்களது கிராம மக்களின் கோரிக்கையை வையுங்கள். உங்களது ஊராட்சி வளர்ச்சித்திட்ட பணிகள் சிறப்பாக நடைபெறும்,’’ என்றார்

Tags : representatives ,Avinashi ,
× RELATED இந்தியாவில் முதல் கொரோனா பரிசோதனை...