×

தமிழக பட்ஜெட்டுக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

உடுமலை,பிப்.17:தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய பேரவை கூட்டம் வி.வல்லக்குண்டாபுரத்தில், அதன் தலைவர் லட்சுமணசாமி தலைமையில் நடந்தது. சிபிஎம் ஒன்றிய செயலாளர் சசிகலா பேசினார். சங்கத்தின் மாவட்ட செயலாளர்  குமார் சிறப்புரையாற்றினார்.
சங்கத்தின் புதிய தலைவராக லட்சுமணசாமி, செயலாளராக ரங்கநாதன், பொருளாளராக தங்கவடிவேலன், துணைத்தலைவராக சுந்தர்ராஜ், துணைச் செயலாளராக ஸ்ரீதர், கமிட்டி உறுப்பினர்களாக வெங்கடேசன், காளிமுத்து, திருமலைசாமி, மோகனசுந்தரம், சரஸ்வதி, கனகராஜ், மாரிமுத்து, ஜெகதீசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகள அமல்படுத்த வேண்டும், நல்லாறு-ஆனைமலையாறு திட்டத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததற்கு கண்டனம் தெரிவிப்பது, மக்காச்சோளத்துக்கு ஆதரவு விலையாக ரூ.3 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும்,  தென்னையை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த அவசர கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Farmers' Union ,Tamil Nadu ,
× RELATED இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த...