×

காரைக்குடி அருகே 2 பேர் கைது

காரைக்குடி, பிப். 13: காரைக்குடி அருகே வீட்டை உடைத்து கொள்ளையடித்த 19 பவுன் நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். காரைக்குடி அருகே அரியக்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). டிவி மெக்கானிக். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகைகளை திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் காரைக்குடி டிஎஸ்பி அருண் தலைமையில் தெற்கு இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்இன்ஸ்பெக்டர் தவமுனி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் காரைக்குடியை சேர்ந்த நாகராஜ் (22), சுரேஷ் (26) நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, 19 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இருவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன என்றும், நகைகளை திருடிய பின் நாகராஜ் சென்னையில் பதுங்கியிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags : Karaikudi ,
× RELATED காரைக்குடியில் இருமல், வயிற்று...