×

ராயபாளையம் சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 6ம் கட்ட கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருமங்கலம், பிப். 13: திருமங்கலம் ராயபாளையத்தில் அமைந்துள்ள சத்ய யுக சிருஷ்டி கோயிலில் 6ம் கட்டமாக நேற்று நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருமங்கலம் அருகேயுள்ள ராயபாளையத்தில் சத்ய யுக சிருஷ்டி கோயில் வளாகத்தில் 108 திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களுக்கு 7 கட்டமாக கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. நேற்று 6ம் கட்டமாக ரங்கநாதர், ஹயகிரீவர், தன்வந்தரி, சக்கரத்தாழ்வாளர், கருடாழ்வார் மற்றும் 12 ஆழ்வார் கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. எஸ்.எஸ். கோட்டை பரஞ்ஜோதி சுவாமி தலைமையில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் திருமங்கலம், கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, விருதுநகர், திருநகர், திருப்பரங்குன்றம், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : devotees ,6th Kumbabishekam ,Satya Yuga Krishti Temple ,Raipalayam ,
× RELATED திரளான பக்தர்கள் பங்கேற்பு கொரோனா...