×

சிவன்மலை தேர்திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கம் 3 நாளில் ரூ.10 லட்சம் வசூல்

காங்கயம், பிப். 13:  காங்கயம் அடுத்த சிவன்மலை தேர்த்திருவிழாவையொட்டி காங்கயத்தில் இருந்து சிவன்மலைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் ரூ.10 லட்சம் வசூலானது. காங்கயம் அருகே உள்ள சிவன்மலை தேர்த்திருவிழா கடந்த 8,9,10 ஆகிய 3 நாட்கள் தேரோட்டம் நடைபெற்றது.
இதற்காக காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து சிவன்மலைக்கும், சிவன்மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கோயிலுக்கும் 10 சிறப்பு பஸ்கள்
இயக்கப்பட்டது.

மேலும், நத்தக்காடையூர், முத்தூர், வெள்ளகோவில், குண்டடம், கொடுவாய் உள்ளிட பகுதியில் இருந்து காங்கயம் பஸ் நிலையம், சிவன்மலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கக்கபட்டது. அரசு போக்குவரத்து கழகத்தின் காங்கயம் பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட இந்த பஸ்கள் மூலம் மூன்று நாட்களில் டிக்கெட் கட்டணம் மூலம் ரூ.10 லட்சம் வசூலானதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Shivanmalai ,
× RELATED கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமாகா சார்பில் ரூ.10 லட்சம் நிதி