×

அனுமதியின்றி செயல்படும் மசாஜ் சென்டர்கள்

கோவை, பிப்.13: கோவையில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகரில் அனுமதியின்றி மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘கோவையில் மொத்தம் 85 மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 15 மசாஜ் சென்டர்கள் மட்டுமே லைசென்ஸ் பெறப்பட்டு உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன.

இங்கு ஆயுர்வேதிக் மசாஜ், ஆயில் மசாஜ் உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகின்றன. இது தவிர கோவை நகரில் காந்திபுரம், பீளமேடு, ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இங்கு நேபாளம், பீகார், திரிபுரா, ஒடிசா, போன்ற வட மாநிலங்களில் வறுமையில் வாடும் இளம்பெண்களை கோவைக்கு அழைத்து வந்து மசாஜ் சென்டரில்  பணிபுரிய வைக்கின்றனர். இங்கு ஆயுர் வேதிக் மசாஜ், ஆயில் மசாஜ் போன்றவற்றையும் தாண்டி பல சட்ட விரோத செயல்கள் நடக்கின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்வதில்லை. எனவே இதுபோன்று சட்ட விரோதமாக செயல்படும் மசாஜ் சென்டர்களை கணக்கெடுத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’. என்றார்.

Tags : Massage centers ,
× RELATED சட்டவிரோதமாக பாலியல் தொழில்...