×

டிரைவர் தற்கொலைக்கு காரணமான விஏஓ சிறையில் அடைப்பு

தாராபுரம், பிப்.12:தாராபுரத்தை அடுத்த மாம்பாடியில் விஏஓவாக பணியாற்றி வருபவர் சுரேஷ் (40). இவருக்கும் தாராபுரம் வருவாய் துறை அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வரும் சுதா (35) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. திருமணம் முடிந்த இரு குழந்தைகளுக்கு தாயான சுதாவை அவரது கணவரும் ஆக்டிங் டிரைவருமான வேலுச்சாமி கண்டித்துள்ளார். இதனால் தம்பதியரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை உப்புத்துறை பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வேலுச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், மேலும் தனது இந்த முடிவுக்கு விஏஓ சுரேஷ் தான் காரணம் என  கடிதம் ஒன்றும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தாராபுரம் போலீசார் வெளியூர் சென்றிருந்த விஏஓ  சுரேசை கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது கைது குறித்து தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார், தாசில்தார் உள்ளிட்டோருக்கு தெரிவிக்கப்பட்டு பின்னர் தாராபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : VAO ,driver suicide ,
× RELATED காரணைமண்டபம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் விஏஓ அலுவலக கட்டிடம்