தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி சித்ரவதை: பெண் உட்பட 3 பேருக்கு வலை

சென்னை: இன்னொரு நிறுவனத்தை பற்றி ஆவதூறாக பேசியதாக தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்தி சித்ரவதை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை மேற்கு மாம்பலம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (38). நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 24ம் தேதி காலை அசோக் நகர்  10வது அவென்யூவில் நடந்து ெசன்றபோது, காரில் வந்த கும்பல், ராமசுப்பிரமணியனை வழிமறித்து குண்டுக்கட்டாக தூக்கி காரில் ஏற்றி சென்றது. பின்னர் வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள ஒரு லாட்ஜிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு, பெண் ஒருவர் தங்களது நிறுவனத்தை பற்றி அவதூறாக விமர்ச்சித்ததாக கூறி, அவரை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ராமசுப்பிரமணியன் அவர்களிடம் இருந்து தப்பி வந்து சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ராமகிருஷ்ணனை கடத்தியதாக கூறப்படும் பெண் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தொழில் போட்டியால் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து  போலீாசர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : company manager ,
× RELATED திண்டிவனம் அருகே பாலியல் சித்ரவதைக்குள்ளான சிறுமி உயிரிழப்பு