×

நாமகிரிப்பேட்டையில் புளிச்சக்கீரை விளைச்சல் ஜோர்

நாமகிரிப்பேட்டை, ஜன.24:   நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள கோரையாறு, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, ராஜபாளையம், பிலிப்பாக்குட்டை ஆகியவை அதிக ஈரப்பதம் கொண்ட பகுதிகளாக உள்ளது. இந்நிலையில், நாமகிரிப்பேட்டை அடுத்த கோரையாறு பகுதியில், விவசாயிகள் மருத்துவ குணம் கொண்ட புளிச்சக்கீரையை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால், புளிச்சக்கீரை செழித்து வளர்ந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஒரு ஏக்கரில் புளிச்சக்கீரை பயிரிட ₹10 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரை செலவாகிறது. ரத்தத்தை சுத்தம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட புளிச்சக்கீரையை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். தற்போது உழவர் சந்தை, தினசரி மற்றும வாரச்சந்தையில் புளிச்சக்கீரை ஒரு கட்டு ₹5 முதல் ₹10 வரை விற்பனை ஆகிறது. விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால் லாபம் கிடைகிறது,’ என்றனர்.

Tags :
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி