×

தனியார் ரயில்கள் வரைவு திட்டம் முதலீட்டாளர்களுக்கு சாதகம் டிஆர்இயூ குற்றச்சாட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்

பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி பெரம்பலூர் புதுபஸ்டாண்டு அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. பயிற்சியை கலெக்டர் சாந்தா தலைமையேற்று துவக்கி வைத்தார். பயிற்சியில் அரசியலமைப்பு ஆணைகள், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர்களுக்கான பொறுப்புகள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை துவக்கி வைத்து கலெக்டர் சாந்தா பேசியதாவது: பெரம்பலூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்கள் அனைவரும் தங்கள் கிராம வளர்ச்சிக்கு முழுமையாக பாடுபட வேண்டும்.

இந்த பதவிகள் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகளையும், வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்ய அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பாலமாக திகழ வேண்டும். அனைவரும் அரசு மூலமாக பொதுமக்களுக்கு செயல்படுத்தும் அத்தனை திட்டங்களையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக அரசின் உதவி தேவைப்படும் தகுதியான நபர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சென்றடைய வாய்ப்பாக அமையும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து தங்கள் ஊராட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

அதைதொடர்ந்து கிராம ஊராட்சி நிர்வாகம் தொடர்பான கிராமசபை, கிராம ஊராட்சி கூட்டங்கள், பயணப்படி, அமர்வுப்படி, பணிகள் அனுமதித்தல், பணிகள் செயலாக்கம் மற்றும் செலவினம் மேற்கொள்ளும் நடைமுறை குறித்தும் மின்னனு பரிவர்த்தனை தொடர்பான பொது நிதி மேலாண்மை அமைப்பு, நிதி அனுமதி நடைமுறை மற்றும் தொகை அனுமதித்தல் நடைமுறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் இயற்கை இடர்பாடுகள் மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது, கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வீட்டுவசதி திட்டங்கள், தூய்மை பாரத இயக்கம், வாழ்வாதார திட்டங்கள் மற்றும் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு ஊரக வளர்ச்சி துறை சார்ந்த அலுவலர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உள்ளிட்ட பவர் கலந்து கொண்டனர்.

Tags : Charge Panchayat leaders ,bridge ,Private Railway Draft Investors Benefit TREU ,public ,government ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!