பஸ் வசதி, பஸ் பாஸ் கேட்டு அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சிதம்பரம், ஜன. 24: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் அரசு கலைக் கல்லூரி உள்ளது. சிதம்பரம்-கடலூர் புறவழிச்சாலையில் இந்த கல்லூரி அமைந்திருப்பதால் இதற்கு போதிய பேருந்து வசதிகள் இல்லை. இதுகுறித்து கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையில் நேற்று இக்கல்லூரி மாணவ, மாணவிகள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பஸ் பாஸ் வழங்க வலியுறுத்தியும், கல்லூரிக்கு சென்று வருவதற்கு கூடுதல் பேருந்து வசதியும் கேட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர். அப்போது பஸ் வசதி வேண்டும். உடனடியாக பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து செய்தனர்.

Tags : Bus facility ,government college students ,protest ,
× RELATED அடிப்படை வசதி இல்லாததை கண்டித்து அரசு...