×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ₹1.3 கோடி மதிப்பில் சாலை பணிகள்

அரூர், ஜன.23: நெடுஞ்சாலை துறை சார்பில் ₹1.3 கோடி மதிப்பிலான 4 சாலை பணிகளை கோட்டப்பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார். அரூர் நெடுஞ்சாலை உட்கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி,  அரூர், மொரப்பூர் சாலையில் சோலைக்கொட்டாயில் அமைந்துள்ள குறுகிய வளைவுகளை விபத்துக்களை தவிர்க்கும் வகையில், ₹45 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி, ₹30 லட்சம் மதிப்பில் ஆண்டியூர், அம்மாபேட்டை சாலை சந்திப்பு  மேம்பாட்டு பணிகளையும், ₹4 லட்சம் மதிப்பில் அம்மாபேட்டை - தாம்பல் சாலை மற்றும்  சிறுபாலப் பணிகள் என மொத்தம் ₹1.03 கோடி மதிப்பிலான பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் தனசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

இது குறித்து அவர் கூறுகையில், ‘ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், 2019-2020ம் நிதியாண்டில் தர்மபுரி மாவட்டத்தில் 77.66 கி.மீ நீள சாலைகள் ₹120.20 கோடி மதிப்பில் அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தர்மபுரி நகர பேருந்து நிலையத்தினை சுற்றியுள்ள சாலையை அகலப்படுத்துதல் மற்றும் வடிகால் அமைக்கும் பணி ₹2.66 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது,’ என்றார். இந்த ஆய்வின் போது, உதவி கோட்டப் பொறியாளர் ஜெய்சங்கர், இளநிலை பொறியாளர் பாஸ்கரன், சாலை  ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags : Road ,Highways Department ,
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...