×

மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டை பெற முகாம்

அரியலூர், ஜன. 22: அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டை பெற சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரியலூர் கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற பதிவு செய்து ஒப்புதல் சீட்டு பெற வேண்டும். இந்த அட்டை பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை அசல், குருதி வகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கையொப்பம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பிறந்த தேதி, தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களுடன் நாளை (23ம் தேதி) அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24ம் தேதி திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 28ம் தேதி செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 29ம் தேதி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 30ம் தேதி ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 31ம் தேதி தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறும் முகாம்களில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Persons ,Camp ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...