தளி ஒன்றிய குழு தலைவர் பொறுப்பேற்பு

தேன்கனிக்கோட்டை, ஜன.21:  தளி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசலுரெட்டி, தளி ஒன்றிய குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நேற்று தளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் பொறுப்பேற்று கொண்டார். அவரை தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அஞ்செட்டி ஒன்றிய பொறுப்பாளர் நாகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் காதர்பாஷா, அவைத்தலைவர்கள் நாகராஜ், கிரிஸ், துணை செயலாளர்கள் முனிராஜ், மஞ்சுநாத், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தளி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாழ்த்தினர்.

Tags : Dali Union Committee ,
× RELATED தல பட டைட்டில் மாற்றம்?