தமிழ் புத்தாண்டு விழா

காரைக்குடி, ஜன.20:  காரைக்குடியில் தமிழ்ப்புத்தாண்டு விழாவை முன்னிட்டு கம்பன் மணிமண்டபத்தில் உள்ள தமிழ்த்தாய் கோவிலில் உள்ள தமிழ்த்தாய் சிலைக்கு பல்வேறு தமிழ் இலக்கிய அமைப்பாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. கம்பன் கழகச் செயலாளர் பேராசிரியர் அய்க்கண், அண்ணா தமிழ்க்கழக தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், செயலாளர் கதிர்வேல், துணைத்தலைவர் சுந்தரம், பொருளாளர் முத்தையா, டாக்டர் சுப்பையா, தமிழ்த்தாய் கலைக்கூட தலைவர் நம்பி, செயலாளர் வெள்ளைச்சாமி, பொருளாளர் சண்முகம், வள்ளல் அழகப்பர் நடையாளர்கள் கழக தலைவர் ஆனந்தன், செயலாளர் ராமகிருஷ்ணன், மாதவன், தொழில் வணிகக் கழக பொருளாளர் அழகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil New Year Festival ,
× RELATED ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழ் புத்தாண்டு விழா