காவலாளி கொலை வழக்கில் பெண் கைது

நாமக்கல், ஜன.20:  திருச்செங்கோடு அருகே எரையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிகவுண்டர்(75). இவர், நாமக்கல் முதலைப்பட்டி பைபாசில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான கார் பட்டறையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு  ஜூன் 14ம் தேதி பழனி கவுண்டரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும், போலீசாரால் தேடப்பட்டு வந்த  துறையூரைச் சேர்ந்த சாந்தி(57) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Arrested In Guards Murder ,
× RELATED திருநம்பியை மணந்த இளம்பெண் பாதுகாப்புகோரி நீதிபதியிடம் மனு