விவசாயிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் அதிரடி கைது

போச்சம்பள்ளி, ஜன.20: போச்சம்பள்ளி அருகே மரம் வெட்டியதில் ஏற்பட்ட தகராறில், விவசாயியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். போச்சம்பள்ளி அடுத்துள்ள அங்கம்பட்டியை சேர்ந்தவர் மாதப்பன்(45), விவசாயி. இவரது உறவினர் மகன் கோவிந்தசாமி(28). கூலி வேலை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, அப்பகுதியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கோவிந்தசாமி, மாதப்பன் தோட்டத்திற்கு சென்று மரம் ஒன்றை வெட்டியுள்ளார்.  இதனை பார்த்த மாதப்பன், யாரை கேட்டு மரம் வெட்டினாய் என கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி, மரம் வெட்ட கொண்டு சென்ற அரிவாளை எடுத்து மாதப்பனை சரமாரியாக வெட்டினார். இதில் மாதப்பனுக்கு கை, கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு, அங்கேயே விழுந்தார். இதையடுத்து, மாதப்பனை மீட்ட அக்கம்,பக்கத்தினர் மத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தசாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : youth action ,
× RELATED விவசாயி தற்கொலை