தர்மபுரி பச்சமுத்து பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பாஸ்கரால் தத்தெடுத்து மருத்துவம், வேளாண், பொறியியல் படித்து முடித்த மாணவர்களின் சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். இயக்குநர் சசிகலா பாஸ்கர், துணைத்தலைவர் அரங்கநாதன், இயக்குநர் இன்னிசை அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கோவை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா, தர்மபுரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் பொதுச்செயலாளர் நந்தகுமார், எஸ்பி ராஜன் ஆகியோர் பேசினர். இதில், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவ, மாணவிகள், முன்னாள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பச்சமுத்து மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதுநிலை தமிழ்த்துறை சார்பில் நடந்த விழாவில் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து படையலிட்டனர். விழாவிற்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீத், இயக்குநர்கள் புஷ்பா பாஸ்கர், பிரியா சங்கீத் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பொங்கல் விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Tags : alumni ,Dharmapuri Bachhamuthu School ,
× RELATED முன்னாள் மாணவர் சந்திப்பு