சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, ஜன.20: தொப்பூர் சுங்கச்சாவடி சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது. தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சுங்கச்சாவடி சார்பில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடந்தது. சுங்கச்சாவடியில் துவங்கி பேரணியை தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணி கலெக்டர் அலுவலகம், நான்கு ரோடு வழியாக சென்று அங்கிருந்து மீண்டும் சேஷம்பட்டி வழியாக சுங்கச்சாவடியை அடைந்தது. பேரணியில் சுங்கச்சாவடி மேலாளர் பெரியதுரை, ஞானசேகர் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி