×

நல்லம்பள்ளி- லளிகம் வழியில் சாலையோர பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தல்

தர்மபுரி, ஜன.20: நல்லம்பள்ளி முதல்  லளிகம் வரையில் சாலையின் இருபுறமும் உள்ள பள்ளங்களை சரிசெய்ய செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி முதல் கோவிலூர், நார்த்தம்பட்டி வழியாக லளிகம் வரை, கடந்த ஆண்டு நெடுஞ்சாலைத்துறை சார்பில், தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக டவுன் பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளி வேன்கள், கார்கள், பைக்குகள் என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், நல்லம்பள்ளி முதல் லளிகம் வரையில் சாலையின் இரு பக்கமும் கடுமையான குழிகள் ஏற்பட்டு உள்ளதால், நேர் எதிரே வரும் வாகனங்களுக்கு கனரக ஒதுங்கி செல்ல முடியாத நிலை, கடந்து ஆறு மாதங்களாக இருந்து வருகிறது. எனவே உடனடியாக சாலையின் இருபுறமும் ஜல்லிக்கற்கள் கொட்டி சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நல்லம்பள்ளியில் இருந்து லளிகம் செல்லும் சாலையில் கோவிலூர் ஏரிக்கரையில் இருந்து லளிகம் வரையில் தார்சாலையின் இருபுறமும், ஏராளமான பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்த சாலையில் வாகனங்கள் எதிரே எதிரே கடந்து செல்லும் போது, பள்ளங்கள் காரணமாக வழிவிட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நல்லம்பள்ளி முதல் இலளிகம் வரையிலான தார்சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கொரோனா தடுப்பூசி விஷயத்தில் மக்கள்...