பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டி

தர்மபுரி, ஜன.20: தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சியில் இலக்கியம்பட்டி, அழகாபுரி, ராஜாஜிநகர் ஆகிய கிராம மக்கள் சார்பில், பொங்கல் விழா மூன்று நாள் நடந்தது. இந்த விழாவையொட்டி விளையாட்டு போட்டிகளான கபடி, வழுக்கமரம் ஏறுதல், பெண்கள் கயிறு இழுத்தல் போட்டி மற்றும் இசைநாற்காலி, ஸ்லோ சைக்கில்  போட்டி நடந்தது. சிறுவர், சிறுமிகள் மற்றும் முதியோர்களுக்கும் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய துணை செயலாளர் காளியப்பன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இலக்கியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். முன்னாள் கவுன்சிலர் மணி, சக்திகுமார், துணைத்தலைவர் நித்யா வெங்கடேஷ், விழா குழுவினர்கள் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.

Tags : Pongal Festival Game Match ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு...