ரூ.5க்கு கூவி கூவி விற்றும் விற்காததால் கேட்பாரற்று வீசப்பட்ட செங்கரும்புகள்

பெரம்பலூர்,ஜன.20: 5ரூபாய் க்கு கூவிக்கூவி விற்றும் வாங்க ஆளில்லாததால் அனாதையாக செங்கரும்புகள் வீசப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் நகருக்கு அம்மாப்பாளை யம், களரம் பட்டி, செட்டிக் குளம், கோனேரிப் பாளை யம் உள்ளிட்ட உள் மாவட் டத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் பயிரிடப்ப ட்ட செங்கரும்புகள் விற்ப னைக்காக கொண்டுவந்து குவிக்கப்பட்டன. அதோடு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சேலம், தருமபுரி, தஞ்சை மாவட்ட செங்கரும்புக ள் காந்திசிலை ரவுண்டானா, என்எஸ்பி.ரோடு, அம் பேத்கார் சிலை என பல்வே று இடங்களில் மலைபோல் குவிக்கப்பட்டு விற்பனை நடந்து வந்தது.

ஆரம்ப கட்டத்திலே அதிரடி யாக 14ம்தேதி ஜோடி ரூ50 க்கு விற்கப்பட்ட செங்கரும்பு, 15ம்தேதி 2வது நாளில் ஜோடி ரூ100க்கு விற்கப்பட்டது. பிறகு மறுநாளே விலை சரிந்ததால் ஜோடி ரூ50க்கும், ரூ30க்கும் எனக் குறைந்தது. 16ம்தேதி கூவிக் கூவி ஜோடி ரூ20க்கு விற்றனர். அதிலும் கரும்பு தேங்கியதால் 17ம் தேதி ஜோடி ரூ10க்கும் தருகி றோம் என போராடிப் பார்த் தனர். ஆரம்பத்தில் 14ம் தேதி கட்டு ரூ500க்கு விற் கப்பட்ட செங்கரும்பு 17ம் தேதி அடிமாட்டு விலைக்கு என கட்டு ரூ50க்கு வந்து நின்றது. இருந்தும் அத னைக்கூட வாங்கிச் செல்ல ஆளில்லாத காரணத்தால் ஆறேழு கட்டு கரும்புகளை விற்பனைக்காக குவித்து வைத்த இடத்திலேயே வியாபாரிகள் விட்டுச் சென்றனர். இதனால் எடுத்துச் செல்ல ஆளில்லாமல் செங்கரும்பு அனாதையாகக் கிடந்து காய்ந்து போனது. கடைசியில் மாடுகள் கூட சீண்ட முடியாமல் காய்ந்து குப்பை மேட்டுக்குதான் சென்றது.

Tags :
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம்